எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜோ ஸ்டோவெல்கட்டுரைகள்

சிறந்த நண்பர் - எப்பொழுதும்

என் தந்தை அடிக்கடி எனக்குக் கூறும் ஞானமுள்ள ஆலோசனைகளில் நான் மதித்து ஏற்றுக்கொள்ளும் ஆலோசனை, “ஜோ, நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் நாம் பெற்றுக்கொள்ளும் மாபெரும் பொக்கிஷங்களில் ஒன்று ஆகும்”. இது எவ்வளவு உண்மை! நல்ல நண்பர்கள் நமக்கிருக்கும் பொழுது நாம் ஒருபோதும் தனிமையாகவே இல்லை. அவர்கள் உங்கள் தேவைகள் என்ன என்பதில் கண்ணோக்கமாயிருப்பதுடன், உங்கள் சுக, துக்கங்களில் மிகவும் கரிசனையுடன் பங்கு கொள்வார்கள்.

இயேசு இவ்வுலகிற்கு வருவதற்கு முன் இரண்டு நபர்கள் மாத்திரம் தேவனின் சிநேகிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவது…

அவரது அன்பின் பிரசன்னம்

எங்களுக்கு அருமையான சிநேகிதி சின்டிக்குப் புற்றுநோய் என்று அறிந்த போது எங்கள் மனம் மிகவும் சோர்வடைந்தது. சின்டி மிகவும் துடிப்புடன் செயல்படுபவள். அவளுடன் தொடர்பு கொண்ட அனைவரின் வாழ்க்கையும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே இருந்தது. அவள் வியாதி குறைந்துவிட்டதை அறிந்து நானும், என் மனைவியும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் சில மாதங்களில் அந்த நோய் அவளை அதிகமாய்த் தாக்கியது. அவள் மிகக்குறைந்த வயதிலேயே மரிக்கப்போவதாகவே எங்களுக்குத் தோன்றியது. அவள் வாழ்க்கையின் கடைசி நிமிடங்களைப்பற்றி அவள் கணவன் என்னிடம் பகிர்ந்து கொண்டார். மிகவும் பெலவீனமாக, நடக்க முடியாத நிலையில் இருந்தபொழுது…

எளியோரின் தேவன்

ஒரு சிலருடைய வாழ்க்கையில் தேவன் அவர்களுக்குச் செய்த அற்புதங்களைப்பற்றிய சாட்சிகளைக் கேட்கும்பொழுது, அது நமக்கு ஓர் சவாலை ஏற்படுத்தும். ஜெபத்திற்குக் கிடைக்கும் பதில்களைப்பற்றி நாம் கேட்டு, மகிழ்ச்சியுறும் பொழுது, சமீப காலத்தில் ஏன் தேவன் நமக்கு அற்புதங்கள் செய்யவில்லை என்று எண்ணத் தோன்றும்.

ஆபிரகாமுக்கு அதிசயிக்கும் விதங்களில் தன்னை வெளிப்படுத்தினது போல நமக்கும் செய்தால் தேவனுக்கு உண்மையுள்ள ஊழியக்காரர்களாக இருக்க அதிகமாக ஊக்குவிக்கப்படுவோம் என்று நாம் எண்ணுவது சரியே. ஆனால் தேவன் ஆபிரகாமுக்கு 12–14 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தம்மை வெளிப்படுத்தினார். ஆபிரகாமின் பெரும்பான்மையான பயணம்…

மிகச்சிறந்த இலக்கியம்

மிகச்சிறந்த இலக்கியம் என்றால் என்னென்ன தன்மைகளை உடையதாக இருக்க வேண்டும் என்று விளக்கின ஒரு கட்டுரையை வாசித்தேன். சிறந்த இலக்கியம் “உங்களை மாற்றும். அதை வாசித்து முடித்தவுடன் நீங்கள் வேறு மனிதராக மாறி இருப்பீர்கள்” என்று அதன் ஆசிரியர் அவரது கருத்தை தெரிவித்திருந்தார்.

அந்தக் கூற்றின்படி வேதாகமம் மிகச்சிறந்த இலக்கியமாக இருக்கும் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. வேதாகமத்தை வாசிப்பது நம்மை சிறந்த மனிதராக வாழ நமக்கு சவால் விடுவதாக உள்ளது. வேதாகமத்திலுள்ள வீரர்கள், கதைகள் நம்மை தைரியமுள்ளவர்களாகவும், விடாமுயற்சி உள்ளவர்களாகவும் இருக்கத் தூண்டுகின்றன. ஞானத்தைப் போதிக்கும்…

இருதயத்தை ஆராய்தல்

நான் சிக்காகோவிற்கு நாள் தோறும் புகை வண்டியில் பயணம் செய்யும் பொழுது எப்பொழுதும் “எழுதப்படாத விதி முறைகளைக்” கடைப்பிடிப்பேன். உதாரணமாக “உன் அருகில் உட்கார்ந்திருப்பவர் உனக்கு அறிமுகமில்லாதவராக இருந்தால் அவருடன் உரையாடாதே” என்பது போன்றவை. இதுவரை நான் சந்தித்த ஒருவர் கூட எனக்கு அந்நியரில்லை. எல்லாருமே பழகினவர்கள். புதியவர்களுடன் பேசுவது என்றால் எனக்கு அலாதிப் பிரியம்! அமைதி காக்கும் விதிமுறைகளை நான் கடைப்பிடித்தாலும் எனக்கு அருகாமையில் உள்ளவர்கள் செய்தித்தாளில் அவர்கள் தேர்ந்தெடுத்து வாசிக்கும் பகுதிகளைக் கொண்டு அவர்களைப்பற்றி சிறிதி அறிந்து கொள்ள இயலும் என்று…

மேலும் சிறப்பானது இனிமேல் தான் வரவுள்ளது

எங்களது குடும்பத்தில் மார்ச் மாதம் என்றால் குளிர்காலத்தின் முடிவு என்று அர்த்தமாகும். அத்தோடு கூட கல்லூரியின் கூடைப்பந்தாட்டத்தின் ஆடம்பரமான “மார்ச் மாத பைத்தியம்” என்ற போட்டிகள் வந்துவிட்டது என்று அர்த்தம். ஆர்வமுள்ள ரசிகர்களாக மிகவும் உற்சாகத்துடன் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதோடு எங்களுக்கு விருப்பமான குழு வெற்றி அடைய வேண்டும் என்று ஆதரவுகளையும் அளிப்போம். அதிகாலையில் எங்களது தொலைக் காட்சிப் பெட்டியை இயக்கியவுடன் ஒளிபரப்பாளர்கள் வர இருக்கும் விளையாட்டைப் பற்றி விமர்சிப்பதைக் கேட்கவும், விளையாட்டுக்கு முன் விளையாட்டு வீரர்கள் பந்தை எறிந்து பழகுவதையும், சக விளையாட்டு…

மதிப்பீட்டு பலகையைத் திருப்பிப்போடு

என் நண்பன் பாப் அவனுடைய மகனின் திருமணவரவேற்பு நிகழ்ச்சியின் பொழுது புது மணத்தம்பதியினருக்கு பல ஆலோசனைகளையும், ஊக்கத்தையும் வழங்கினார். அவர் அவ்வாறு பேசும் பொழுது தன்னுடைய நகருக்கு அருகாமையிலுள்ள கால்பந்து பயிற்சியாளரைப்பற்றி குறிப்பிட்டுப் பேசினார். அந்த பயிற்சியாளர் தன்னுடைய அணி தோல்வியுற்ற பொழுது, தோல்வியுற்றதற்கான மதிப்பீடுகள் குறிப்பிட்டுள்ள பலகையை, தோல்வியுற்றவர்கள் தங்கள் தோல்வியை நினைவுகூரும்படி ஓர் வாரம் முழுவதும் பார்வைக்கு வைத்திருந்தார். இது கால்பந்து விளையாட்டிற்கு வேண்டுமானால் சிறந்த தந்திரமாக இருக்கலாம், ஆனால் திருமண விஷயத்தில் அது பயங்கரமான தந்திரம் என்று கூறி ஞானமான…

இவ்வாண்டாய் இருக்கக் கூடும்

என்னுடைய தகப்பனார் ஒரு போதகர் ஒவ்வொரு புதிய ஆண்டின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையிலும் இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்து அநேகத் தரம் ஒன்று தெசலோனிக்கேயர் நான்காம் அதிகாரத்திலிருந்து பிரசங்கிப்பார். “இயேசு கிறிஸ்துவின் வருகை இந்த ஆண்டில் இருக்கக் கூடும், அவரைச் சந்திக்க ஆயத்தமா” என்பதே அவருடைய போதனையின் மையக் கருத்தாய் இருக்கும். நான் ஆறு வயது சிறுவனாய், இந்த பிரசங்கத்தைக் கேட்ட பொழுது, இது உண்மையானால் அவரைச் சந்திக்கும் கூட்டத்தில் நான் இருப்பேன் என்ற நிச்சயம் எனக்குள் இல்லை என்று நினைத்ததை என்னால் மறக்க…

ஒரே அளவு எல்லோருக்கும் பொருந்தும்

அநேக சிறு பிள்ளைகளைப் போல நானும் கிறிஸ்மஸை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவேன். மிகவும் எதிர்பார்ப்புடன் கிறிஸ்மஸ் மரத்தின் அடியிலிருந்து எனக்கு என்ன விளையாட்டுச் சாமான், பொம்மை கிடைக்குமென்று ஆவலுடன் தொட்டுப் பார்ப்பேன். ஆகவே எனக்கு வயதானவுடன் சட்டையும், கால்சட்டையும் எனக்கு பரிசாக கிடைக்க ஆரம்பித்தவுடன் மனம் சோர்ந்து போனேன். பெரியவர்களுக்கு கிடைக்கும் பரிசுகள் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை தராது. சென்ற ஆண்டு கிறிஸ்மஸிற்கு எனது பிள்ளைகள் பிரகாசமான நிறங்களும், அலங்கார வடிவமைப்பு கொண்ட மிக நேர்த்தியான காலுறைகளை எனக்கு பரிசாகக் கொடுத்தார்கள் நான் மிகவும் இளம்…